சிரிப்பு வந்தது
UPDATED : ஜூன் 12, 2025 | ADDED : ஜூன் 12, 2025
ஒருமுறை சீடர்களுடன் நடந்து சென்றார் இயேசு. வழியில் வந்த ஒருவர் தரக்குறைவாக பேசி அவரை வம்புக்கு இழுத்தார். தீமை செய்தவருக்கும் நன்மை செய்யும் விதத்தில் சிரித்துக் கொண்டே நடந்தார். காரணம் புரியாமல் விழித்த சீடர்களிடம், 'ஏழை என யார் தன்னை தேடி வந்தாலும் உதவி செய்பவன் இவன். அவனுடைய தயாள குணம் நம்மிடம் இல்லையே என நினைத்தேன். சிரித்து விட்டேன்'' என்றார். மற்றவரிடம் உள்ள நல்லதை மட்டுமே காணுங்கள்.