உள்ளூர் செய்திகள்

இனிமை இதோ...

இசைக்கருவியான ஹார்மோனியத்தில் உள்ள துருத்தியை இடது கையால் அழுத்தினால் காற்று உள்ளே வரும். சங்கீத ஸ்வரம் எழுப்பும் கட்டைகளை வலது கையால் மீட்டும் போது உள்ளே வந்த காற்று எப்படி அசைக்கிறோமோ அதற்கு ஏற்ப ஒலி ஏற்படும். துருத்தி மூலம் வரும் காற்றை நுழையாதபடி அசைப்பதை நிறுத்தி விட்டால், கட்டையின் மீது வலது கை விரல்களால் எவ்வளவு அழுத்தினாலும் ஒலி எழும்பாது. ஹர்மோனியம் இசைக்க காற்று தேவை. அதை இயக்குவதற்கு இடது, வலது கைகளின் ஒத்துழைப்பு அவசியம். அதைப் போல குடும்பம் என்பதும் ஹார்மோனியம் போலத்தான். கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து ஒற்றுமையுடன் இருந்தால் தான் வாழ்வில் இனிமை சேரும்.