தீர்க்க தரிசனம்
UPDATED : ஜூலை 15, 2025 | ADDED : ஜூலை 15, 2025
இயேசுவின் பக்தையான எலியா வாழ்ந்த இஸ்ரவேல் நாட்டில் பஞ்சம் நிலவியது. குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் வருந்தினர். அந்த நாட்டை ஆட்சி செய்த ராஜாவும், ராணியும் மழைக்காக ஜெபம் செய்தனர். ஜெபம் செய்வதால் பலன் கிடைக்காது. ஏனெனில் இயேசு இன்னும் பல ஆண்டுக்கு மழையை வருவிக்க மாட்டார் என தீர்க்க தரிசனத்தால் சொன்னாள் எலியா. இதனால் ராஜாவின் கோபத்திற்கு ஆளானாள். 'உன் உயிருக்கு ஆபத்து உள்ளதால் மறைவாக வாழ்ந்திடு' என இயேசு அவளுக்கு கட்டளையிட காட்டிற்குள் சென்றாள். அங்கு பறவைகள் மூலம் அவளுக்கு உணவு கிடைக்கச் செய்தார். எலியாவின் தீர்க்க தரிசனத்தால் சொன்னது உண்மை என பின்னாளில் ராஜாவும், ராணியும் உணர்ந்தனர்.