பரிசு
UPDATED : ஆக 08, 2025 | ADDED : ஆக 08, 2025
ஆண்ட்வான் லோரான் இலவாஸ்யே என்பவர் பாரீசில் பிறந்தார். இளம் வயதில் தாயாரை இழந்ததால் தந்தையின் ஆதரவில் வளர்ந்தார். தந்தையின் விருப்பத்திற்காக சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். ஆனால் அவரது மனம் அறிவியல் துறையில் ஈடுபாடு கொண்டிருந்தது. இந்நிலையில் பாரீஸ் நகர் எங்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் திட்டத்தை உருவாக்கும் நபருக்கு பரிசளிக்கப் போவதாக அறிவித்தார் மன்னர். சவாலான திட்டம் ஒன்றை மிகச் சிக்கனமான முறையில் தயாரித்து கொடுத்தார் இலவாஸ்யே. அவரின் திறமையை அரசும் பயன்படுத்தி வெற்றி கண்டது.