அன்பின் ஆலயம்
UPDATED : ஆக 20, 2025 | ADDED : ஆக 20, 2025
கறுப்பு இன மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் அமெரிக்கா ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன். அடிமைகளை விலைக்கு வாங்குவதை தடுக்க சட்டம் இயற்றினார். இதை விரும்பாத ஒருவனின் குண்டுக்கு பலியானார். அவரது உடல் எலினா என்னும் ஊருக்கு திறந்த வண்டியில் கொண்டு வரப்பட்டது. வழியெங்கும் மக்கள் அஞ்சலி செலுத்தினர். ஒரு நீக்ரோ பெண் தன் மகனை துாக்கிக் கொண்டு, ''நன்றாக பாரடா! இந்த தலைவர் நமக்காக உயிரையே கொடுத்தார்'' எனக் கதறினாள். அன்பின் ஆலயமான ஆப்ரகாம் லிங்கன் இன்றும் புகழுடன் வாழ்கிறார்.