என் கடமை
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கனிடம் ஒரு பெண், 'எதிரிகளிடம் எப்படி நட்பு கொள்ள உங்களால் முடிகிறது' எனக் கேட்டார். ''நீங்கள் கேட்பது சரிதான். நான் அவர்களிடம் நட்பு கொள்ளாவிட்டால் பிரச்னை இன்னும் அதிகமாகி விடும். அவர்களும் நல்லவராக மாற வாய்ப்பு தருவது அரசின் பிரதிநிதியான என் கடமை'' என்றார். எதிரி மீதும் இரக்கம் காட்டு.