இரக்கம் கொள்
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
மீன்பண்ணை ஒன்றில் கண்ணாடி தொட்டியில் இருந்த பெரிய மீன்கள் சிறிய மீன்களை விரட்டிக் கொண்டே இருந்தன. அதை பணியாளரான அல்போன்ஸ் பொருட்படுத்தவில்லை. பண்ணைக்கு வந்த சிறுவன் ஒருவன், ''அங்கிள்! சின்ன மீன்களை வேறு தொட்டிக்கு மாற்றுங்கள். இல்லாவிட்டால் பெரிய மீன்கள் அவற்றை விழுங்கி விடும்'' என்றான். ''தம்பி... உனக்கு இருக்கும் புத்தி கூட எனக்கு இல்லையே'' என வருந்தினான் அல்போன்ஸ். அவற்றை வேறு தொட்டிக்கு மாற்றினான். மகிழ்ச்சியுடன் அவை நீந்த ஆரம்பித்தன. உயிர்கள் மீது இரக்கம் கொள்பவனே மனிதன்.