தாயுள்ளம்
UPDATED : ஆக 09, 2024 | ADDED : ஆக 09, 2024
தந்தை இறந்த பின் தாயை முதியோர் காப்பகத்தில் சேர்த்தான் ஜோஸ்வி. இரண்டு ஆண்டுக்குப் பின் தாயிடம் இருந்து அழைப்பு வந்தது. ' எனக்கு மின்விசிறி வாங்கிக் கொடு. இங்குள்ள கட்டில், சேரை சரிசெய்து கொடு' என்றாள் தாய். 'ஏனம்மா இவ்வளவு நாளாக சொல்லாமல் இப்போது சொல்கிறாயே' எனக் கேட்டான் ஜோஸ்வி.'நாளைக்கே நான் இறந்து போனால் என்னைப் போல வயதானவர் யாராவது இங்கு தங்கக் கூடும். அவர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காகச் சொன்னேன்' என்றாள். 'இத்தனை நாளும் உங்களின் நல்ல மனசை புரிஞ்சுக்காம போயிட்டேனே' என வருந்தி தாயாரை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.