தைரியமே வெற்றி
UPDATED : நவ 17, 2023 | ADDED : நவ 17, 2023
நம்மை பல கஷ்டங்கள் துரத்துகின்றன. சிலருக்கு வேலையில் சிலருக்கு குடும்பத்தில் பிரச்னை. இதற்கு ஜெபித்தால் பிரச்னை தீரும். அவர்களுக்கான வசனங்கள் இதோ...'ஆண்டவரே, எங்கு வேண்டுமானாலும் என்னை அனுப்பும்! ஆனால், நீர் மாத்திரம். என்னோடு இரும். எவ்வளவு சுமையானாலும் என் மீது சுமத்தும்! ஆனால், நீர் மாத்திரம் என்னைத் தாங்கிக் கொள்ளும். எனக்குள்ள எல்லா கட்டுகளையும் துண்டித்து விடும்! ஆனால், என்னை மாத்திரம் உம்மோடு இணைத்து கட்டிக் கொள்ளும்.