உள்ளூர் செய்திகள்

குயிலும் மயிலும்

யானையைக் கண்டால் உருவத்தில் பெரிதாக இருக்கிறதே என்றும், மானைக் கண்டால் வேகமாக ஓடுகிறதே என்றும் பொறாமை கொண்டது மயில். ஒருநாள் மாலையில் வானம் இருண்டது. அதைக் கண்ட மயில் தோகை விரித்து ஆடியதோடு பாடவும் தொடங்கியது. ஆனால் தன் குரலை நினைத்து அதற்கு அழுகை வந்தது. இதைக் கண்ட குயில் அதை சமாதானப்படுத்த ''உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். தோகை தான் உனக்கு அழகு. அதற்கு ஈடானது ஏதுமில்லை'' என்றது. உண்மையை உணர்ந்த மயில் தன்னை திருத்திக் கொண்டது.