அமைதியான பதில்
UPDATED : டிச 01, 2023 | ADDED : டிச 01, 2023
ஒருவர் கோபமாக பேசும் போது மேலும் கோபத்தை துாண்டும் வகையில் அவரிடம் பேசக் கூடாது. இதனால் வீண்பேச்சு வளரும். கைகலப்பு வரை ஏற்பட்டு உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். குடும்பத்தில் அல்லது பணிபுரியும் இடத்தில் பிறர் கோபமாக பேசினாலும் அமைதியாய் இருப்பதே புத்திசாலித்தனம். சில நிமிட கோபத்தால் சிக்கலில் மாட்டிக் கொள்வது நல்லதல்ல. “அமைதியான பதில் கோபத்தை மாற்றும். மனதை புண்படுத்தும் வார்த்தையோ ஆத்திரத்தை கிளப்பும்”.