உள்ளூர் செய்திகள்

நேரான வழியில்...

ஒரு ஆட்டுக்கிடைக்குள் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் இருக்கும். அதன் வாசல் வழியாக வராமல் வேறு வழியில் வருகிறவரை திருடன் என புரிந்து கொண்ட ஆடுகள் மேய்ப்பவனை உஷார்படுத்தும். நேரான வாசல் வழியாக வருபவன் பின்னால் பயமின்றி செல்லும். அது போல நேர்மையான வழியில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பின் தைரியமாக செல்லுங்கள். அவர்களது போதனைகளை செவி கொடுத்து கேளுங்கள். உங்களுக்கான வளர்ச்சிப்பாதையை கண்ணில் காட்டுவார்.