வாழ்வு எப்படிப்பட்டது
UPDATED : டிச 07, 2023 | ADDED : டிச 07, 2023
பேராசிரியர் ஹியூஜ் மூர்ஹெட் என்பவர் சிலரைத் தேர்ந்தெடுத்து, 'வாழ்வின் அர்த்தம் என்ன?' என கேட்டார். அவர்களின் கருத்தை புத்தகமாக வெளியிட்டார். அதில் வெறும் யூகம், தற்பெருமை மட்டுமே இருந்தது. அதில் ஒருவர் கூட ஆண்டவரின் விருப்பப்படி வாழ்வு அமைகிறது எனக் கூறவில்லை. நம் வாழ்வு எப்படிப்பட்டது என்பதற்கு விளக்கம் அளித்த பேராசிரியர், 'நம் வாழ்வின் ஒவ்வொரு செயலும் அவரின் சித்தப்படியே நடக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.