உள்ளூர் செய்திகள்

யாருக்கு உரிமை

கருமியான செல்வந்தர் ஒருவர் தனிநபராக வாழ்ந்து மறைந்தார். கேள்விப்பட்ட பலர் அவரது வீட்டுக்குள் நுழைந்து கண்ணில் சிக்கியதை எல்லாம் கைப்பற்றினர். இதையறிந்த பக்கத்து வீட்டுக்காரர் அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்களும் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இதன் பின் அதிகாரிகளுக்கு பயந்து எடுத்துச் சென்ற பொருட்களை வீட்டின் முன்புறம் மக்கள் தாங்களாகவே வைத்துச் சென்றனர். செல்வந்தரின் பொருள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பது போல நம்மிடம் உள்ள பணம், செல்வம், புகழ் மீது தற்காலிக உரிமை கொண்டாடலாம். அதை எண்ணி இறுமாப்பு கொள்வது கூடாது. ஆண்டவர் ஒருவரே நிரந்தர உரிமை கொண்டவர்.