லேசானது மனசு
UPDATED : மார் 15, 2024 | ADDED : மார் 15, 2024
பாதிரியார் ஒருவரிடம், ''பக்கத்து வீட்டுக்காரர் பலவிதங்களில் துன்பம் தருகிறார். என்ன செய்வதென தெரியவில்லை' என வருத்தப்பட்டார் ஒரு பக்தர். ''துன்பத்தை பொறுத்துக் கொள். மறப்பது அதை விட நல்லது. அவரிடம் அன்பு காட்டுவது இன்னும் நல்லது. 'ஆண்டவரே! இவரை மன்னிப்பீராக... இன்னது செய்கிறோம் என தெரியாமலே அவர் தீங்கு செய்கிறார்' என பிரார்த்திப்பது மிகவும் நல்லது'' என அறிவுறுத்தினார். சுமை இறக்கி வைத்தது போல மனம் லேசானதை உணர்ந்தார் பக்தர்.