பதவியும் பணிவும்
UPDATED : மே 31, 2024 | ADDED : மே 31, 2024
பணத்தால், பதவியால் சிலர் ஆணவத்துடன் செயல்படுவர். மற்றவர்களிடம் அலட்சியமாக நடப்பர். 'பதவி வரும் போது பணிவு வர வேண்டும்' என்பார்கள் பெரியவர்கள். சிறுவயது முதலே குழந்தைகளிடம் பணிவாக இருக்கவும், தங்களின் தேவைகளை தாமே நிறைவேற்றவும் கற்றுத் தர வேண்டும். புத்தகங்களை அடுக்கி வைத்தல், உணவு பரிமாறுதல், பெரியோரை மதித்தல், ஏழைகளுக்கு உதவுதல் என உதவி செய்யும் மனப்பான்மையுடன் அவர்கள் செயல்பட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல சமுதாயம் உருவாகும்.