உள்ளூர் செய்திகள்

வயது என்பது...

எண்பது வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தவர் எழுத்தாளர் ஜான்வெஸ்லி. நுாற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். அவர் தினமும் 15 மணி நேரம் உழைப்பார். இரண்டு மணி நேரம் நின்று கொண்டே பிரசங்கம் செய்வார். குதிரை சவாரி செய்வார். 'ஊழியம் செய்ய வயது, உடல்நிலை, பணம் தேவையில்லை. ஆண்டவர் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால் போதும். அவர் நம்மை பார்த்துக் கொள்வார்' என அடிக்கடி சொல்வார். வயது என்பது உடலிற்கு மட்டுமே; மனதிற்கு அல்ல.