நீங்கள் தயாரா...
UPDATED : அக் 06, 2023 | ADDED : அக் 06, 2023
பாதிரியார் ஒருவர் பிரசங்கத்தில் ஈடுபட்டார். அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து, 'பரலோகத்தில் உள்ள தேவ துாதர் உங்களிடம், ''ஒருவருக்கும் உதவி செய்யும் எண்ணம் ஏன் வரவில்லை'' என கேட்பார். அதற்கு பதில் சொல்ல தயாராக இருங்கள் என்றார். பிறர் துன்பப்படுவதை அடுத்தவர் சொல்லக் கேட்டாலோ அல்லது பார்க்க நேர்ந்தாலோ அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். ஆறுதல் சொல்லுங்கள். முடிந்தால் உதவுங்கள். அவர் உங்களுக்காக தேவையான அனைத்து செயலையும் தோளில் சுமப்பார். இரக்க குணம் உடையவரை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.