உள்ளூர் செய்திகள்

பிறந்தநாடு பொன்னாடு

இயேசுபிறந்த நாடு இஸ்ரேல். இஸ்ரவேல் என்றும் பாலஸ்தீனம் என்றும் அழைப்பர். இதன் தலைநகர் ஜெருசலேம். மக்கள் தொகை 45 லட்சம். <கேரள மாநிலம் அளவுக்கே இருக்கும். இங்கு தனி நபர் வருமானம் 2லட்சம் ரூபாய். அந்நாட்டில் நியூஷெக்கல் என்ற நாணயத்தைப் பயன்படுத்துகின்றனர். டெல்அவீவ், ஹாய்பா நகரங்கள் முக்கியமானவை. இயேசு இந்த நாட்டிலுள்ள பெத்லகேமில் பிறந்தார். இங்கு வயல்கள் அதிகம். பெத்லகேம் என்ற சொல்லுக்கு 'அப்பத்தின் வீடு' என்று பொருள். இங்கு தானிய விளைச்சல் அதிகம். அக்காலத்தில் இவ்வூரில் சிறிய விடுதிகள் இருந்தன. தெருவோரங்களில் உள்ள குன்றுகளில் சிறிய குகை வடிவ விடுதிகளை உருவாக்குவர். இவற்றில் ஆடு மாடுகள் தான் அடைக்கப்படும். அந்த விடுதிகளில் ஒன்றில் தான் சூசையப்பரும், மரியாளும் தங்கினர். அங்கு தான் இயேசு பிறந்தார்.