உள்ளூர் செய்திகள்

வழுவாதே நழுவாதே...

தந்தையும், மகனும் வீட்டருகில் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது, 'என் கையை பிடித்துக் கொள்' என சொன்னார் தந்தை. அவன் மழைக் கோட் அணிந்திருந்ததால் அவர் சொல்வதை காதில் வாங்காமல் நடந்தான். ஓரிடத்தில் வழுக்கி விடவே அவன் கீழே விழுந்தான். தந்தையின் கைகளை உறுதியாக பற்றி இருந்தால் வழுக்கலில் இருந்து தப்பி இருக்கலாம். அதைப்போல தேவனின் கைகளை பற்றிக் கொள்ளுங்கள். உலக பற்றில் இருந்து தப்பி விடலாம் என்கிறது பைபிள்.