குழந்தைகள் விஷயத்தில் கவனம்
குழந்தைகள் கருவில் இருக்கும் போதே, நல்ல பழக்கங்களை ஒரு தாயும், தந்தையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மேற்கொண்டால், அந்த குழந்தை மிக நல்ல பழக்கங்களுடன் வளரும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர். ஆனால், இக்காலத்தில் நற்பழக்கங்களை கடைபிடிக்கும் பெற்றோர் குறைந்து விட்டனர்.வியன்னா நாட்டில் சிக்மண்ட் பிராய்ட் என்ற மனநல மருத்துவ நிபுணர் இருந்தார். அவரை சந்தித்த ஒரு பெண்மணி, 'குழந்தைகளுக்கு எப்போது முதல் நற்பழக்கங்களை கற்றுத்தர வேண்டும்,'' எனக் கேட்டார்.''உங்கள் குழந்தையின் வயது என்ன?'' என டாக்டர் கேட்டபோது, ''ஐந்தாகிறது'' என்றார் அப்பெண்மணி.''உடனே வீட்டுக்கு ஓடுங்கள். ஐந்து ஆண்டுகளை ஏற்கனவே வீணடித்தது போதும். வீட்டுக்குச் சென்ற உடனேயே பயிற்சியை துவக்கி விடுங்கள்,'' என்றாராம் டாக்டர்.''பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதனை விடாதிருப்பான்,'' என்கிறது பைபிளின் நீதிமொழி அதிகார வசனம்.