இயேசுவின் தந்தை பெற்ற கூலி
UPDATED : மே 20, 2013 | ADDED : மே 20, 2013
இயேசுவின் தந்தை சூசையப்பர் (ஜோசப் அல்லது யோசேப்பு என்றும் சொல்வர்) தச்சுத்தொழில் செய்தார் அல்லவா! அக்காலத்தில் செல்வந்தர்கள் வீடுகளுக்கு மட்டுமே செய்த வேலைக்குத் தகுந்தாற்போல் வெள்ளிப்பணம் கொடுப்பார்கள்.வெள்ளிக்காசின் எடையை 'ஷேக்கல்' என்ற அளவையால் நிர்ணயிப்பர். ஒரு ஷேக்கல் 11.04 கிராம். சாதாரண மக்களின் வீடுகளில் வேலை செய்தால் பணம் கிடையாது. திராட்சை ரசம், கம்பளி ரோமம், தானியம், ஒலிவ எண்ணெய் ஆகியவையே கூலியாகக் கிடைக்கும்.