இயற்கையின் தீர்ப்பு
UPDATED : அக் 15, 2023 | ADDED : அக் 15, 2023
எனக்கு நிம்மதியாக துாக்கம் வர என்ன செய்ய வேண்டும் என ஆசிரியரிடம் கேட்டான் மாணவன். அவரோ 'தொடர்ந்து பழகு இதுவும் கடந்து போகும்' என்றார். அதன்படியே சில நாட்கள் கழித்து துாக்கம் வருகிறது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் துாங்கி விடுகிறேன் அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என கேட்டான். 'இதுவும் கடந்து போகும்' என பதில் அளித்தார் ஆசிரியர். சில நேரங்களில் நமக்கு நடக்கும் நன்மை தீமைகளை அப்படியே அனுபவிக்க வேண்டும். அதை தவிர்க்க முடியாது அது இயற்கையின் தீர்ப்பு.