இரக்க குணம்
UPDATED : செப் 02, 2023 | ADDED : செப் 02, 2023
குதிரையை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார் பணியாளர் ஒருவர். அதனிடம் அன்பு காட்டுவது போல் நடிப்பாரே தவிர குதிரைக்கு தரப்படும் உணவில் பாதியை அவரே எடுத்துக் கொள்வார். மீதியை மட்டுமே உண்பதால் குதிரை பசியால் வாடியது. ஒருநாள் பணியாளரிடம், 'உண்மையிலேயே என் மீது அன்பாகத்தான் இருக்கிறாயா' என கேட்டது குதிரை. உயிர்கள் மீதும் இரக்கம் வேண்டும் என மனம் திருந்தினார் பணியாளர்.