மகிழ்ச்சியில் திளைப்போம்
UPDATED : ஜூலை 19, 2022 | ADDED : ஜூலை 19, 2022
மனிதர்கள் பலரும் ஆணவமாக உள்ளனர். இதற்கு காரணம் படிப்பு, பதவி, சொத்து என பலவற்றை அடுக்கலாம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாம் இப்படியே இருந்துவிடுவோம் என நினைக்கின்றனர். இதனால் நண்பர்கள், உறவினர்கள் இடையே பிரச்னை ஏற்படுகிறது. கடைசியில் மனநிம்மதி காணாமல் போகிறது. சரி இதற்கு தீர்வுதான் என்ன? 'வாழ்க்கை யாருக்கும் சொந்தம் இல்லை' என்ற எண்ணத்தை நிரப்புவோம். மகிழ்ச்சியில் திளைப்போம்.