உள்ளூர் செய்திகள்

கேளுங்க இளசுகளே!

ஸ்காட்லாந்து நாட்டின் சுவிசேஷகர் அலெக்சாண்டர் டப், இந்தியா வந்து போதகராக பணியாற்றினார். ஓய்வுபெறும் காலம் வந்தது. ஓய்வை விரும்பாத அவர், தன் தாய்நாடு சென்று இளைஞர்களை அழைத்து வந்து சுவிசேஷப் பணியை தொடர எண்ணினார். ஆனால், நாடு சென்ற அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இளைஞர்கள் சுவிசேஷப்பணிக்கு வர மறுத்தனர்.உடனே அவர் கடுமையாகப் பேசினார்.''அரசாங்க உத்தியோகம் என்றால் ஓடி வரும் நீங்கள், இந்த உலகத்துக்காக உயிர் கொடுத்த ஒரு உத்தமரின் அன்பை பறைசாற்ற முன்வர மறுக்கிறீர்களே! இது நியாயமா?'' என கேட்டார்.எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.உடனே அவர் இன்னும் ஆவேசமாக, ''சரி! யாரும் தேவையில்லை. என் வயதையும் பொருட்படுத்தாமல் நானே அங்கு செல்கிறேன். முதுமை காரணமாக என்னால் பிரசங்கம் செய்ய முடியாவிட்டாலும், அந்த தேசத்தில் என் ஜீவனை விதையாக ஊன்றுவேன் (உயிரையும் கொடுப்பேன்)'' என்றார்.இந்த தீரமிக்க பேச்சைக் கேட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அவருடன் புறப்பட்டனர்.பக்தி என்றாலே முதியவர்களுக்கு தான் என்ற இலக்கணம் மாற வேண்டும். இளைஞர்களே! நீங்கள் பக்தியிலும் முதலிடத்தை நீங்களே பிடியுங்கள்.