அன்பு என்னும் மருந்து
UPDATED : மே 24, 2022 | ADDED : மே 24, 2022
ஆராய்ச்சிக்காக ஒரே விதமான நோய் உள்ள பத்து நபர்களை தேர்ந்தெடுத்து, இரு அறையில் சமமாக பிரித்து தங்க வைத்தனர். ஒரு அறையில் உள்ளவர்களுக்கு மருந்தும், மற்றொரு அறையில் உள்ளவர்களுக்கு மருந்துடன் சேர்த்து அன்பான வார்த்தைகளும் கொடுக்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்... அன்பான வார்த்தைகள் கேட்ட நபர்கள் சீக்கிரம் குணமடைந்தனர். இதற்கான காரணம் என்ன தெரியுமா...நோயாளிகளின் மனம் அன்புக்காக ஏங்கும். எனவே உடலை சரி செய்ய மருந்தும், மனதை சரி செய்ய அன்பான வார்த்தைகளையும் கொடுங்கள்.