மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
UPDATED : மார் 14, 2022 | ADDED : மார் 14, 2022
நம்மில் பெரும்பாலானோர் 'உலகம் ஏன்தான் இப்படி இருக்கிறது. இவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ' என்று புலம்புவர். இப்படி உள்ளோர் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா... தனக்காக உலகம் மாற வேண்டும் என நினைப்பவர்கள். அது முடியுமா... முடியாது. இது பலருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு புலம்பல், ஒரு அலட்டல். சரி இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசிக்கிறீர்களா.. ஒன்றும் இல்லை நாம் உலகத்திற்கு ஏற்றாற்போல் மாறிவிட வேண்டியதுதான். புரியுதா... சரி புரியாதவர்களுக்கு ஒரு உதாரணம். நாம் அவசரமாக வெளியே கிளம்ப வேண்டிய சூழல். மழை கொட்டித் தீர்க்கிறது. என்ன செய்வோம். ரெயின் கோட்டை போட்டுக்கொண்டு பறந்துவிடுவோம் அல்லவா... அதுபோல்தான் ஒருவர் எப்போது திருந்துவார் என்று வருந்தாதீர்கள். திருந்தும்போது திருந்தட்டும் என்று மனதை ரிலாக்ஸாக வைத்திருங்கள்.