அந்த 21 நாட்கள்
UPDATED : செப் 22, 2023 | ADDED : செப் 22, 2023
'' கோழி, குஞ்சு பொரிக்குமா... எனக்கேட்டால் ஆம் என்று தான் சொல்வீர்கள். அது எப்படி அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தாய்கோழியானது தன்சுகம், பசி, வெளியுலக நடமாட்டம் எல்லாவற்றையும் மறந்து 21 நாட்கள் ஆடாமல் அசையாமல் தவநிலையில் இருந்து குஞ்சு பொரிக்கும். அது அடைகாத்துக் கொண்டிருக்கும் போது ஒரு முட்டையை மட்டும் தனியாக எடுத்து வையுங்கள். அதை தன் அலகுகளால் இழுத்து தன் சிறகிற்குள் இழுத்துக் கொள்ளும். இதைப்போல நீங்களும் தவவாழ்வு மேற்கொண்டால் உயர்ந்த பண்புகள் உங்களிடம் இருப்பதை உணரலாம்.