அன்று சொன்னது இன்று நடக்கிறது!
UPDATED : ஜூன் 11, 2014 | ADDED : ஜூன் 11, 2014
இப்போது சில அரசியல்வாதிகள் பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்துகின்றனர். அது பையன்கள் செய்கிற சிறு தவறு தான் என்றும், சம்பந்தப்பட்ட பெண்ணும் இதற்கு உடந்தையாகத்தான் இருக்கிறாள் என்றும் பேசுகின்றனர். கற்பழிப்பவர்களை தூக்கில் போட்டால், அந்தப் பெண்ணையும் சேர்த்து தூக்கில் போடுங்கள் என்கிறார் ஒருவர். அதாவது, ஒரு கேடு கெட்ட செயலை நியாயப்படுத்துகிறது இன்றைய அரசியல் உலகம்.இதை பைபிள் அன்றே சுட்டிக்காட்டியது.''தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!'' என்று (ஏசா5:20) ஒரு வசனம் வருகிறது.ஆம்...தீமையை நன்மையாக்க முயற்சிக்கும் இந்த போக்கிற்கு யாரும் அடிபணிந்து விடக்கூடாது.தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து...!