உள்ளூர் செய்திகள்

ஏழுமலை

திருப்பதி ஏழுமலைக்கான பெயர் காரணம் தெரியுமா...1. வேங்கட மலை: 'வேம்' என்றால் பாவம், 'கட' என்றால் 'நாசமடைதல்'. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு, 'வேங்கட மலை' எனப் பெயர். இந்த மலையில் தான் திருப்பதி கோயில் உள்ளது.2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். 'சேஷன்' என்றால் 'பாம்பு'. எனவே இது ஆதிசேஷன் பெயரால் 'சேஷ மலை' எனப்படுகிறது.3. வேத மலை: வேதங்கள் மலை வடிவில் தங்கி பெருமாளை பூஜித்தன. இதுவே வேதமலை.4. கருட மலை: வைகுண்டத்தில் இருந்து கருடனால் கொண்டு வரப்பட்ட மலை இது.5. விருஷப மலை: பெருமாளை வழிபட்ட விருஷபன் என்ற அசுரனுக்கு இங்கு மோட்சம் கிடைத்தது. இவனது பெயரில் இந்த மலை உள்ளது.6. அஞ்சன மலை: ஹனுமனின் தாய் அஞ்சனை குழந்தை வரம் பெற, திருப்பதியிலுள்ள ஆதிவராஹரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஹனுமனைப் பெற்றாள். இவளின் பெயரில் இருக்கும் மலை இது.7. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு இடையே யார் பலசாலி என போட்டி ஏற்பட்டது. இதற்கு நடுவராக இருந்த மகாவிஷ்ணு, இருவரும் பலத்தில் சமம் என தீர்ப்பளித்தார். இதையறிந்த இருவரும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலை, 'ஆனந்த மலை' எனப்பட்டது.இந்த ஏழுமலைகளையும் ஏறி வருவோருக்கு கவலையில்லை. ஏழேழு பிறவிக்கும் பயமும் இல்லை.