இந்த வாரம் என்ன
டிச.13 கார்த்திகை 28: பிரதோஷம். திருவண்ணாமலை தீபம். திருக்கார்த்திகை. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஜோதிரூப தரிசனம். சுவாமிமலை, திருப்பரங்குன்றம் முருகன் தேர். வள்ளியூர் சுப்பிரமணியர் தெப்பம். திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம். கணம்புல்ல நாயனார் குருபூஜை. டிச.14 கார்த்திகை 29: ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் அலங்கார திருமஞ்சனம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம். டிச.15 கார்த்திகை 30: பாஞ்சராத்திர தீபம். பெருமாள் கோயில்களில் தீபோற்ஸவம். பவுர்ணமி. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம். டிச.16 மார்கழி 1: ஷடசீதி புண்ணிய காலம். கோயில்களில் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவள்ளூர் வீரராகவர் புறப்பாடு. டிச.17 மார்கழி 2: சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம். பத்ராசலம் ராமர் புறப்பாடு. டிச.18 மார்கழி 3: சங்கடஹர சதுர்த்தி. திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல். டிச.19 மார்கழி 4: சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.