உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ரா.பர்வதவர்த்தினி, சின்னமனுார், தேனி. *தாலி பாக்கியத்திற்கு....பெண் தெய்வத்தை குலதெய்வமாக கொண்டவர்கள் அந்த அம்மனையே வழிபடுங்கள். மற்றவர்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுங்கள். பி.தேவி, அடகூர், மைசூரு.*வாம பாகம் என்றால் என்ன?சிவனின் இடதுபாகம் வாமபாகம். பார்வதி தவம் இருந்து அவரின் இடது பாகத்தை அடைந்தாள். இதையே 'அர்த்தநாரீஸ்வரர்' என்கிறோம். சி.திருநாவுக்கரசு, நெய்வேலி, கடலுார். *காப்புத்தடை என்றால்...அம்மனுக்கு காப்பு கட்டும் போது ஊரில் இருப்பவர்கள் திருவிழா முடியும் வரை வெளியே செல்லக் கூடாது. இதுவே காப்புத்தடை. இ.ஸ்ரேயா, நங்கநல்லுார், சென்னை. *துர்கைக்கு வேறு பெயர் உண்டா...உண்டு. அவை கொற்றவை, காடுகிழாள், காளி ப.காளமேகம், ஊட்டி, நீலகிரி. *சிங்கத்தின் மீது அம்மன் வலம் வருவது ஏன்?தீயசக்தியை அழிக்க சிங்கத்தின் மீது அம்மன் கோபத்துடன் வலம் வருகிறாள். சி.ரிஷி, கயத்தாறு, துாத்துக்குடி. *கருமாரி, அருள்மாரி என அம்மனை அழைக்கிறோமே...அசுரன் மாரனை அழித்து மழையை தந்தவள் மாரி. கருணைமழை பொழிவதால் கருமாரி. அருள்மழை பொழிவதால் அருள்மாரி. கு.ரம்யா, கரோல்பாக், டில்லி. *அம்மனின் மாதமாக ஆடியை அழைப்பது ஏன்?சுவாமிக்கு உரியது உத்ராயணம், (தை - ஆனி), அம்மனுக்கு உரியது தட்சிணாயணம் (ஆடி - மார்கழி). அதனால் முதல் மாதத்தை கொண்டாடுகிறோம். சா.பாரி, முதுகுளத்துார், ராமநாதபுரம். *சக்தி உபாசகர் என்பது ஏன்?அம்பிகையின் மூலமந்திரங்களை ஜபிப்பவர்கள், ஸ்ரீசக்கர பூஜை செய்பவர்கள் சக்தி உபாசகர்கள். பி.பிரகதி, நாகர்கோவில், கன்னியாகுமரி. *லலிதா சகஸ்ரநாமம் எந்த நுாலில் உள்ளது?மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது. பண்டாசுரனை அழிக்க தேவர்கள் யாகம் நடத்திய போது, அம்பிகை காட்சியளித்தாள். அப்போது தேவர்கள் துதித்த ஆயிரம் திருநாமங்களே லலிதா சகஸ்ரநாமம்.