உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

எம்.மைதிலி, ஆர்.கே.புரம், டில்லி.*சாப்பிட்டதும் தட்டில் கை கழுவலாமா?சாப்பிடும் தட்டு புனிதமானது என்பதால் அதில் கை கழுவக்கூடாது. எம்.அனிதா, நத்தம், திண்டுக்கல்.*சுவாமிக்கு கண்ணாடி காட்டுவது ஏன்?பூஜையின் போது பதினாறு உபசாரம் (ஷோடச உபசாரம்) செய்ய வேண்டும். அதில் ஒன்று கண்ணாடி காட்டுதல். ஆர்.சீதா, வில்லியனுார், புதுச்சேரி.*தரையில் விழுந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாமா?பவழமல்லி தவிர மற்ற பூக்களை பயன்படுத்தக் கூடாது. வி.ரமேஷ், ஆயக்குடி, தென்காசி.*கோயில் கொடிமரத்தில் உப்பு, மிளகு கொட்டுவது ஏன்?தோல் நோய், கொப்பளம் மறைய நேர்த்திக்கடனாக இதைச் செய்வர். எஸ்.வினித், ஜெயந்தி நகர், பெங்களூரு.*ஒற்றுமையுடன் வாழ ஒரு ஸ்லோகம் சொல்லுங்கள்.மாதாச பார்வதீதேவி பிதாதேவோ மகேஸ்வர பாந்தவா: சிவபக்தாஸ்ச ஸ்வதேசோ புவனத்ரயம்||நம் தாய் பார்வதி, தந்தை சிவன், பக்தர்கள் நம் சகோதரர்கள், மூவுலகும் நம் சொந்த ஊர். இதை தினமும் சொல்லி வழிபடுங்கள். ஆர்.பிரபு, சிவகாசி, விருதுநகர்.*கடவுளுக்கு நைவேத்யம் செய்வது ஏன்?நைவேத்யம் என்றால் 'தெரிவிப்பது' என பொருள். இதன் மூலம் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். எம்.விக்னேஷ், பல்லடம், திருப்பூர்.*விழாக்களில் மங்கள இசை தவிர மற்றவை இசைக்கலாமா?மங்கள இசை தவிர பக்தி பாடல்களை மட்டும் ஒலி பரப்பலாம். கே.மணி, எழும்பூர், சென்னை.*பசுவதை செய்யலாமா?கூடாது. அப்படி செய்தால் 21 தலைமுறைக்கும் அந்த பாவம் தொடரும். ஆர்.பார்த்திபன், தோவாளை, கன்னியாகுமரி.*கல்யானைக்கு கரும்பு கொடுத்த சித்தர் எங்குள்ளார்?மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது.