உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ப.ராதா, வாசுதேவநல்லுார், தென்காசி.*மன்னிக்கும் மனம் யாருக்கு வரும்?தவறுக்கு காரணம் ஒருவரின் அறியாமை. இதை உணர்ந்தால் மன்னிக்கும் மனம் வரும். அ.காசி ராஜன், ஊட்டி, நீலகிரி. *நிலவைக் காட்டி குழந்தைக்கு சோறுாட்டலாமா?நிலவைக் காட்டி ஊட்டினால் பிடிக்காத உணவைக் கூட குழந்தை மகிழ்ச்சியாக உண்ணும். வி.ராகவி, காரைக்குடி, சிவகங்கை.*பரத கண்டம் என்றால் என்ன?இமயம் முதல் குமரி வரை ஆட்சி செய்த மன்னர் பரதன். இவர் சகுந்தலை, துஷ்யந்தன் தம்பதியின் மகன். இவரது பெயரால் நம் நாட்டை பரத கண்டம் எனவும் அழைக்கிறோம். வே.சிவராமன், பசவன்குடி, பெங்களூரு.*பணம் பன்மடங்கு பெருக...திட்டமிட்டு உழை. கடவுளை நம்பி செயல்படு.எல்.ஆதிரா, திப்பிரமலை, கன்னியாகுமரி.*விடாக்கண்டன், கொடாக்கண்டன் என்கிறார்களே...விட்டுக் கொடுக்காதவன் விடாக்கண்டன். கொடுக்க மனமில்லாதவன் கொடாக்கண்டன். பி.வசந்த், அனுமந்தை, விழுப்புரம்.*கூர்ம அவதாரக் கோயில் எங்குள்ளது?மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கூர்மம் (ஆமை). ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் பலமனேர் அருகிலுள்ள கூர்மம் என்னும் கிராமத்தில் உள்ளது. டி.உமேஷ், நிலக்கோட்டை, திண்டுக்கல்.*நம்பினார் கெடுவதில்லை என்பது ஏன்நம்பியவரை கடவுள் காப்பாற்றுகிறார் என்பதை வேதம் சொல்கிறது. இதை மகாகவி பாரதியார் தன் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.பிரீத்தி, கல்யாண்புரி, டில்லி.*பகவானே... பகவதியே... என அழைப்பது ஏன்?பக' என்றால் பாக்கியம்(நலம்). அதனை தருவதால் சுவாமியை பகவான் என்றும், அம்பிகையை பகவதி என்றும் அழைக்கிறோம். கே.ராகவன், கோடம்பாக்கம், சென்னை.*ருத்ராபிஷேகம் என்றால் என்ன?வேதத்தில் உள்ளது ஸ்ரீருத்ர மந்திரம். இதை 11முறை ஜபித்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம்.