உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கே.சிம்மா, பூவசரங்குப்பம், விழுப்புரம்.*வாழ்க்கையை தீர்மானிப்பது யார்? முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியத்தின் படி வாழ்க்கை அமையும். அதை தெய்வத்தின் கட்டளைப்படி கொடுப்பது நவக்கிரகம். ரா.விவேகானந்தன், அய்யாத்தோப்பு, கன்னியாகுமரி. *எழுதும் போது 'உ' என தொடங்குவது ஏன்?பிரணவ மந்திரமான 'ஓம்' என்பதன் சுருக்கம் 'உ'. மங்கலத்தின் அடையாளமாக இதை எழுதுகிறோம். சி.கவிதா, வீரபாண்டி, தேனி.*கருட புராணம் எதைப் பற்றி சொல்கிறது?இறந்த பின் உயிரின் நிலை, பாவம் செய்த உயிர்களின் கஷ்டங்கள், இறந்தவருக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை விளக்குகிறது. இதை துக்க வீட்டில் படிப்பர். டி.வைஷ்ணவி, நங்கநல்லுார், சென்னை. *கர்மா எத்தனை?1. முற்பிறவிகளில் செய்தது சஞ்சிதம். 2. இப்பிறவியில் நம்முடன் வந்தது பிராப்தம். 3. நாம் செய்து கொண்டு இருப்பது ஆகாமியம். சி.கார்த்திகா, கல்யாண்புரி, டில்லி.*சுவாமிக்கு கதர்துணி சாத்தலாமா?சாத்தலாம். இதை கார்ப்பாச வஸ்திரம் என்கிறோம். எம்.பவி, சிவாஜி நகர், பெங்களூரு. *கமலா சப்தமியன்று யாரை வழிபடலாம்?கமலா சப்தமி என்பது பங்குனி வளர்பிறை சப்தமியாகும். அன்று சூரியன், மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். கண்நோய் தீரும்.வி.குமார், பசுமலை, மதுரை.*குருதோஷம் தீர...வியாழக்கிழமையன்று விரதம் இருங்கள். மாலையில் தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலையோ அல்லது குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலையோ சாத்துங்கள். பி.அழகேசன், தச்சநல்லுார், திருநெல்வேலி.*சிவனுக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை என்ன செய்யலாம்?சிறிதளவு நீர்நிலையில் கரைத்து விட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். மு.வெண்ணிலா, அலகுமலை, திருப்பூர்.*வீட்டில் பூஜை செய்ய பழத்தை மட்டும் நைவேத்யம் செய்யலாமா?படங்களாக இருந்தால் பழங்களையும், சிலையாக இருந்தால் அன்னத்தையும் சேர்த்து நைவேத்யம் செய்யுங்கள்.