கேளுங்க சொல்கிறோம்
வி.மித்ரன், விக்ஞான்நகர், பெங்களூரு. *உயர்ந்த உதவி எது?ஏழைக்கு உதவுவதே உயர்ந்த உதவி. வி.ஷாலினி, வாடிப்பட்டி, மதுரை. *சிறந்த நண்பன்...துன்பத்தில் கைகொடுப்பவனே. அ. லோகேஷ், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.*மாடத்தில் இருந்து மருந்துக்காக துளசி இலையை பறிக்கலாமா?அது வழிபாட்டுக்கு உரியது. அதனால் வேறு துளசி செடியில் பறிக்கலாம்.ஆர். பிரியா, ரோகிணி செக்டார், டில்லி. *வெற்றி, திருப்தி எது சிறந்தது?வெற்றி நிரந்தரம் அல்ல; திருப்தியே சிறந்தது. த. நாகமுத்து, மைலாடி, கன்னியாகுமரி*மாவிலை தோரணத்தில் எத்தனை மாவிலைகள் இருக்க வேண்டும்?குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க வேண்டும்.ர. ராஜா, கண்டமங்கலம், புதுச்சேரி*நீரில் குழைத்து திருநீறு பூசலாமா?தீட்சை பெற்றவர்கள் மட்டும் இப்படி செய்யலாம். ம. சிவாஜி, போத்தனுார், கோயம்புத்துார்.*சந்திர தரிசனத்தால் நன்மை உண்டா?மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் நீங்கும். ம.பரசுராம், சிதம்பரம், கடலுார்.*கெட்ட கனவு வராமல் தடுக்க...படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்கையை வழிபடுங்கள். அ.மாதவன், உக்கிரன் கோட்டை, திருநெல்வேலி. *பிடித்த காய், பழத்தை கயா யாத்திரையில் கைவிடச் சொல்வது ஏன்...ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். மா.முத்து, வாகரை, திண்டுக்கல்.*கருட புராண புத்தகம் வீட்டில் இருக்கலாமா?இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை படிப்பர்.