உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

எம்.மைதிலி, ராமமூர்த்திநகர், பெங்களுரு: குலதெய்வத்தை மறந்தால்...பரிகாரம் கிடையாது. உடனே குலதெய்வக் கோயிலுக்கு செல்லுங்கள். ஆண்டுக்கு இருமுறை செல்வது கட்டாயம்.பி.ரமா, ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல்: சுவாமி படத்தில் இருந்து விழுந்த மாலையை மீண்டும் சாத்தலாமா?சாத்தலாம். பயம் வேண்டாம்.எஸ்.முத்து, கருங்கல், கன்னியாகுமரி: பெருமாள் கோயில் தீர்த்தத்தை வீட்டில் தெளிக்கலாமா?புனிதமான கோயில் தீர்த்தத்தை தெளிக்கலாம். ஆர்.பரணிதரன், கீழப்பாவூர், தென்காசி: கடனாக கொடுத்த பணம் கிடைக்க...சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துங்கள். ஆர்.அகிலா, போத்தனுார், நீலகிரி. கவலையான என் மனதிற்கு பரிகாரம் உண்டா...திங்கள் தோறும் அல்லது பவுர்ணமியன்று அம்மனுக்கு வெண்ணிற மலர்களைச் சாத்தி விளக்கேற்றுங்கள்.ஆர். அபர்ணா, மதுராந்தகம், செங்கல்பட்டு: பிறந்த நட்சத்திரத்தன்று வளைகாப்பு நடத்தலாமா?கூடாது. உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற நாளில் நடத்துங்கள். கே.பவித்ரன், சோழவந்தான், மதுரை: வீட்டு வாசலில் உள்ள காகத்தின் கூட்டை கலைத்தால்...முட்டை இட்டு குஞ்சுகள் வளர்ந்ததும் பறந்து விடும். அதுவரை பொறுமையாக இருந்தால் புண்ணியம். அ.மணி, பப்பன்கிளேவ், டில்லி: தெய்வானையை பற்றிச் சொல்லுங்கள். சூரபத்மனை வதம் செய்த முருகனுக்கு நன்றிக்கடனாக இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து வைத்தனர் தேவர்கள். பா.ஜெயஸ்ரீ, நெய்வேலி, கடலுார்: திவசம், தர்ப்பணம் செய்ய ஏற்ற இடம் எது?திவசத்தை வீட்டிலும், தர்ப்பணத்தை ஆற்றங்கரையில் செய்யலாம்.