உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ரா.பாபு, கன்னாட்பிளேஸ், டில்லி: குடும்ப நிம்மதிக்கு... விட்டுக் கொடுங்கள். சேர்ந்து உண்ணுங்கள். ஒருவருக்கு ஒருவர் ஆலோசித்து செயல்படுங்கள். எம்.நந்தினி, பெருங்குடி, மதுரை: ஆண்கள் கோலமிடலாமா?கோலமிடலாம். ஆனால் பெண்கள் கோலமிடுவதே அழகு. ஆர்.ராஜேஷ், நாகர்கோவில், கன்னியாகுமரி: திருஷ்டி கழிக்க ஏற்ற நாள்...ஞாயிறு, செவ்வாய், அமாவாசை நாளில் கழிக்கலாம். நா.ராஜேஸ்வரி, ராமநகரம், பெங்களூரு: என் மகனுக்கு ஜாதகம் இல்லை. என்ன செய்யலாம்?மனப்பொருத்தம் போதுமே. கி.ஸ்ரீமதி, தச்சநல்லுார், திருநெல்வேலி: எந்த திசை நோக்கி திருநீறு பூசலாம்?காலையில் கிழக்கு, மற்ற நேரத்தில் வடக்கு. மா.அகல்யா, நங்கநல்லுார், சென்னை: வெள்ளிக்கிழமை அன்று அமாவாசை வந்தால் கோலமிடலாமா?காலையில் வேண்டாம். மாலையில் இடலாம். யா.கண்ணன், பல்லடம், கோயம்புத்துார்: பவுர்ணமி விரதம் இருந்தால்...தாயாருக்கு நன்மை. தீயஎண்ணம் மறையும். மனம் உறுதி பெறும்.பா.விக்னேஷ், வில்லியனுார், புதுச்சேரி: குளிகை நேரத்தில்...இறுதிச்சடங்கு, கடன் வாங்குவது கூடாது. சுபநிகழ்ச்சி நடத்தலாம்.அ.மீரா, கன்னிவாடி, திண்டுக்கல்: இறந்தவர் மீது வில்வ இலை துாவலாமா?சிவதீட்சை பெற்றிருந்தால் துாவலாம்.