உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

 தா.சிவசித், இந்தர்புரி, டில்லி: கண் பிரச்னை தீர... 'ஆலம் தானுகந்து அமுது செய்தானை...' எனத் தொடங்கும் பதிகத்தை தினமும் படியுங்கள். பா.குமார், தேவகோட்டை, சிவகங்கை: *திருநீறு பூசும் போது என்ன மந்திரம் சொல்லலாம்?'ஓம் நமசிவாய' எனச் சொல்லுங்கள். ஆ.காந்திமதி, சேர்ந்தமரம், தென்காசி: *கடைசியாக விநாயகரை வழிபட்டால் தவறா...தவறில்லை. கடைசியாக கொடிமரத்திலுள்ள விநாயகரை வணங்குங்கள். ரா.மகதி, நெலமங்கலா, பெங்களூரு: *கோபூஜை செய்ய வாய்ப்பு இல்லை. என்ன செய்ய? வெள்ளியன்று பசுவுக்கு அகத்திக்கீரை, அருகம்புல், வாழைப்பழம் கொடுங்கள். எம்.யாழினி, வண்டலுார், காஞ்சிபுரம்: *யாருக்கு சஷ்டியப்த பூர்த்தி (மணி விழா) நடத்தலாம்?60 வயது பூர்த்தியானவர்கள் நடத்தலாம். வ.பரமு, கம்பம், தேனி: *பருவ வயதில் உள்ள என் பேத்திக்கு மொட்டை நேர்ச்சை உள்ளது. என்ன செய்ய?கூந்தல் நுனியில் பூ முடித்து அதை கத்தரித்து செலுத்தலாம். வீ.மணி, குடிமங்கலம், திருப்பூர்: *நேர்த்திக்கடனை எவ்வளவு நாளில் செலுத்தலாம்?அவரவர் வசதிக்கேற்ப செலுத்தலாம். நா.பிரஹதி, திருநாவலுார், கள்ளக்குறிச்சி: *கிரகணத்தின் போது வெளியே வரக் கூடாதா...கர்ப்பிணிகள் வரக் கூடாது. கி.தருமர், நாகர்கோவில், கன்னியாகுமரி: *கிரகணத்தின் போது தர்ப்பணம் செய்யலாமா...தர்ப்பணம் செய்யலாம்.