உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

மு.மகாலட்சுமி, ஆர்.கே.நகர், சென்னை: பணம் சேர...வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருங்கள். அ.விஜயலட்சுமி, சுசீந்திரம், கன்னியாகுமரி: *காலையில் விழித்ததும் ஆன்மிக ரீதியாக என்ன செய்ய வேண்டும்?இரண்டு கைகளை சேர்த்து வைத்து மகாலட்சுமி, சரஸ்வதி, பார்வதியை வழிபடுங்கள். வெ.ராமலட்சுமி, மேலுார், மதுரை: *வாகன விபத்தை தவிர்க்க...ராகு காலத்தில் எலுமிச்சம்பழம் வைத்து துர்கைக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஜி.முத்துலட்சுமி, பெரியகுளம், தேனி: *கல்வி, கலைக்கான பயிற்சிகளை எந்த நாளில் தொடங்கலாம்?அமாவாசை, பிரதமை, அஷ்டமி, நவமி, பவுர்ணமி இல்லாத திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தொடங்கலாம். ரா.பாக்கியலட்சுமி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி: *இயற்கையும் கடவுளும் ஒன்றா... ஒன்றல்ல. கடவுளே இயற்கையை இயக்குகிறார். எம்.தைரியலட்சுமி, பாகூர், புதுச்சேரி: *எவர்சில்வர் பாத்திரத்தில் நைவேத்யம் செய்யலாமா? கூடாது. வாழை இலையில் நைவேத்யம் செய்யுங்கள். என்.வீரலட்சுமி, ராம்நகர், பெங்களூரு: *ஆடியில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே...வழிபாட்டுக்கு உரியதாலும், தெய்வ அருள் பெற வேண்டும் என்பதாலும் ஆடியில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லை. சி.அன்னலட்சுமி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி: *நம் உடம்பில் கோதுாளி பட்டால் நல்லதாமே...பசுவின் காலடியில் கிளம்பும் புழுதி கோதுாளி. இது உடம்பில் பட்டால் பாவம் தீரும். பா.சந்தானலட்சுமி, மறைமலைநகர், செங்கல்பட்டு: *பசுவை நீராட்டி மஞ்சள், குங்குமம் இட்டால்...மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். நலமுடன் வாழ்வீர்கள்.