கேளுங்க சொல்கிறோம்
எஸ்.ஜலஜா, வடிவீஸ்வரம், நாகர்கோவில்: திரிசூலத்தின் தத்துவம்...அறியாமை, ஆணவத்தை கைவிட்டு நல்ல குணத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான். ஆர்.அமுதா, தென்காசி: ஒரு காலை மடக்கியபடி அம்மன் காட்சியளிப்பது ஏன்?அம்மன் சிலை இப்படித் தான் இருக்க வேண்டும் என்பது மரபு. கா.தீபா, காரியாபட்டி, விருதுநகர்: மூலவருக்கு பின்புறம் தீபம் எரிவது ஏன்?மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது. பா.ராஜி, மதுரை: பெற்றோரின் பிரார்த்தனையால் பிள்ளைகளுக்கு நன்மை கிடைக்குமா?கிடைக்கும். பிள்ளைகளுக்காக பெற்றோரும், பெற்றோருக்காக பிள்ளைகளும் பிரார்த்தனை செய்வது அவசியம். கே.எஸ்.உமா, கோயம்புத்துார்: புதுமணத் தம்பதி குலதெய்வத்தை கும்பிட நாள் பார்க்கணுமா?மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள். ஜஸ்வின் கவுர், டில்லி: 'அவனுக்கு என்ன... கொடுத்து வைத்தவன்' என்பது ஏன்?முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனையே 'அதிர்ஷ்டம்' என்கிறோம். இதை தான் இப்படி சொல்வர். ஆர்.சூர்யா, சிவகங்கை: தவறைக் கண்டிப்பது கட்டாயமா...கண்டிப்பது கட்டாயம். ஒரு முறை சொல்லிப் பாருங்கள். கேட்காவிட்டால் விட்டு விடுங்கள். எஸ்.சுபா, மந்தைவெளி, சென்னை: திருஷ்டி சுற்றுவது அவசியமா...அவசியம் தான். முச்சந்தியில் எடுத்த காலடி மண், வற்றல் மிளகாயால் தலையை மூன்று முறை சுற்றி விட்டு எரியுங்கள். ஆர்.ப்ரீத்தி, பழவந்தாங்கல், சென்னை: எடுத்தெறிந்து பேசுபவரிடம் எப்படி பழகுவது?நண்பன் என்றால் சகித்துக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் மவுனமாக இருங்கள்.