உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

எஸ்.ரவி, முருகப்பாக்கம், புதுச்சேரி: அசைவம் சாப்பிட்ட அன்று கோயிலுக்கு செல்லலாமா... கூடாது. பாவத்தைச் செய்ய அனுமதி கேட்கிறீர்களே... மறுநாள் கோயிலுக்கு செல்லுங்கள். பி.கனகராஜ், அரசரடி, மதுரை: வேல்மாறல் என்றால்... வேலை ஏந்திய முருகப்பெருமானே என்னைக் காப்பாற்று' என வேண்டி, பாடுவது இது. வீ.கனகவள்ளி, குரோம்பேட்டை, சென்னை:தாமரைத்தண்டு திரியில் விளக்கு ஏற்றினால்...முன்வினை பாவம் தீரும். கடன் பிரச்னை குறையும். கே.பி.மனோகரன், சூலுார், கோயம்புத்துார்: கோயிலில் பக்தர்கள் தரும் பிரசாதத்தை சாப்பிடலாமா?சுவாமியை தரிசித்த பின் சாப்பிடலாம். ர.சிவராமன், ராமமூர்த்தி நகர், பெங்களூரு: ராணுவத்தில் பணிபுரிய விரும்புகிறேன். தடை ஏற்படுகிறதே...உங்கள் குறைகளை சரி செய்யுங்கள். கடவுள் அருளால் பணி கிடைக்கும். அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி: சித்தர்கள் வழிபாட்டை எந்த வயதில் தொடங்கலாம்?ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் தொடங்கலாம். இ.செல்வம், சங்கரன்கோவில், தென்காசி: ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்தால்...குடும்பம் தழைக்கும். புண்ணியம் சேரும். ஈ.மாணிக்கம், பழநி, திண்டுக்கல்: புதுமணத் தம்பதி மலைக்கோயிலுக்கு செல்லக் கூடாதா...திருமணமாகி ஆறு மாதத்திற்கு பிறகே செல்லலாம்.