கேளுங்க சொல்கிறோம்
டி.லட்சுமி, விருகம்பாக்கம், சென்னை: வழிபாட்டில் பசுவிற்கு முதலிடம் ஏன்? தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் தருகிறோம். என்.அமுதா, செஞ்சி, விழுப்புரம்: ராகு காலத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே... அசுர கிரகம் ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ஏற்படலாம். ஆர்.பாரதி, தக்கலை, கன்னியாகுமரி: அமாவாசை தர்ப்பணத்தை இரவில் கொடுக்கலாமா?கூடாது. மதியம் 2:00 மணிக்குள் கொடுக்க வேண்டும். ர.வத்ஸலா, மதுரை: கார்த்திகை மாத அமாவாசையின் சிறப்பு... திருவிசநல்லுார் ஸ்ரீதர ஐயாவாளுக்காக கங்காநதி அவரது வீட்டுக் கிணற்றில் தோன்றியது இந்நாளில் தான்.ஆர்.ஜெயச்சந்திரன், வேட்டைக்காரன் புதுார், பொள்ளாச்சி: பிரதோஷத்தன்று நந்தியை வழிபடுவது ஏன்?அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை காப்பாற்றியதற்கு நன்றியாக நந்தியை வழிபடுகிறோம். அ.ஏக்நாத், மருதமலை, கோயம்புத்துார்: பவள மாலையை அணியலாமா...அணியக் கூடாது. அவரவர் ராசிக்கு ஏற்ற நவரத்தின மாலையை அணியலாம். எம்.சிவபார்வதி, கோவில்பட்டி, துாத்துக்குடி: ஸ்லோகத்தை தவறாக உச்சரித்தால்...பூஜையின் முடிவில், 'அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க' என வேண்டினால் தோஷம் வராது. தி.அன்னபூரணி, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: கடனாக கொடுத்த பணம் கிடைக்க…கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க' என சொல்லி தினமும் விளக்கேற்றுங்கள். எம்.நாகஜோதி, வேடப்பட்டி, திண்டுக்கல்: சுபநிகழ்ச்சியில் ஆரத்தி சுற்றுவது ஏன்?பலருடைய பார்வையும் குறிப்பிட்ட ஒருவர் மீது பதிவதால் பாதிப்பு வரலாம். அதை போக்க ஆரத்தி சுற்றுகின்றனர்.