கேளுங்க சொல்கிறோம்
ஆர்.ரங்கசாமி, வடுகபட்டி, தேனி: *தினமும் பகவத்கீதை படித்தால்...நம்பிக்கையுடன் படியுங்கள். கிருஷ்ணர் அருளால் அமைதி, நிம்மதி கிடைக்கும். ரா.தனபால், புதுபெருங்களத்துார், சென்னை: தினமும் கந்தசஷ்டி கவசம் பாடலாமா?காலையும், மாலையும் அவசியம் பாடுங்கள். நவக்கிரகத்தால் நன்மை கிடைக்கும். எம்.ரம்யா, மார்த்தாண்டம், கன்னியகுமாரி: அபிஜித் முகூர்த்தம் என்றால்... அபிஜித் என்றால் 'வெற்றி தருவது'. முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் இதில் (காலை 11:20 - 12:50 மணி) நடத்தலாம். த.நேரு, வெண்கரும்பூர், கடலுார்: *பைரவருக்கு பூசணிக்காய் தீபமேற்றலாமா... இது இப்போது ஏற்பட்ட வழக்கம். அனுபவ ரீதியாக பலன் கிடைப்பதால் ஏற்றுகின்றனர். பி.குமார், கருமத்தம்பட்டி, கோயம்புத்துார்: நவக்கிரகங்களில் சனீஸ்வரருக்கு மட்டும் ஈஸ்வர பட்டம் ஏன்?'சனை' என்றால் மந்தமாக, 'சரன்' என்றால் செல்பவர். சனை+சரன்= சனைச்சரன். இதுவே சனீஸ்வரன் என்றானது. அ.தன்யஸ்ரீ, பசவன்குடி, பெங்களூரு: குத்து விளக்கிற்கு பதிலாக சிறிய அகலில் விளக்கு ஏற்றலாமா?எந்த விளக்கு ஏற்றினாலும் புண்ணியம். து.சேரன், ஆலங்குளம், தென்காசி: பெருமாளுக்கு உரிய பூக்கள்...துளசி, பவழமல்லி, மல்லிகை.க.சுப்பிரமணியன், மேல்அக்ரஹாரம், விழுப்புரம்: பெருமாள் கோயிலில் தாயாரை முதலில் தரிசிக்கணுமா...தாயாரை முதலில் தரிசித்தால் தான் பெருமாளின் அருள் கிடைக்கும். நா.வேலன், பி.ஆர்.சி. காலனி, மதுரை: மனக்கஷ்டம், பணக்கஷ்டம் தீர...தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள்.