உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

முரளி.வ, மருதமலை, கோயம்புத்துார்: உற்சாகமுடன் இருக்க... ஆதிசங்கரர் எழுதிய 'கணேச பஞ்சரத்னம்' பாடி விநாயகரை வழிபடுங்கள். ராஜா.எம், அம்பத்துார், திருவள்ளூர்: குழந்தைகள் தடையின்றி பேச...காயத்ரி தேவிக்கு பிரசாதமாக தேன் வைத்து வழிபடுங்கள். அதை நாக்கில் தடவுங்கள். கனகா.எஸ், திருநாவலுார், கள்ளக்குறிச்சி: துாக்கத்தில் குழந்தை அலறுகிறதே... பரிகாரம் உண்டா.... கண்காட்டு நுதலானும்' எனத் தொடங்கும் திருவெண்காட்டு பதிகம் பாடுங்கள். குழந்தைக்கு தினமும் திருநீறு பூசுங்கள். பாக்கியம்.ஏ, வால்பாறை, பொள்ளாச்சி: குடும்ப பிரச்னை தீர...சதுர்த்தி திதி அன்று கணபதி ஹோமம் நடத்துங்கள். குமார்.கு, கொட்டாம்பட்டி, மதுரை: பெற்றோர் செய்த நல்லதும், கெட்டதும் வாரிசை சேருமா...ஆம்... இதில் என்ன சந்தேகம். அனுபமா.வி, சாத்தான்குளம், துாத்துக்குடி: சுத்த ஜாதகம் என்றால்... லக்னம், 12 ராசிகளில் தோஷம் இல்லாதபடி கிரகங்கள் இருக்க வேண்டும். பழனிக்குமார்.ஆர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்: தியானத்தில் உள்ள சிவபெருமானை வழிபடலாமா?வழிபடலாம். மனம் ஒருமுகப்படும். தைரியம் அதிகரிக்கும். ராஜி.ஆர், திருநயினார்குறிச்சி, கன்னியாகுமரி: சன்னதியை எத்தனை முறை சுற்றலாம்?ஒரு முறை சுற்றுவது கட்டாயம். அதற்கு மேல் சுற்றினால் புண்ணியமே. கண்ணன்.கி, கரோல்பாக், டில்லி: விளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா?நடத்தலாம். உங்களால் குடும்பத்திற்கே நன்மை கிடைக்கும்.