கேளுங்க சொல்கிறோம்
ரேஷ்மா.எஸ், முருகப்பாக்கம், புதுச்சேரி: நெய் தீபம் ஏற்றினால்...மகாலட்சுமியின் அருளோடு பணமும் சேரும். கனகவள்ளி.ஆர், குரோம்பேட்டை, சென்னை: மவுன விரதம் இருந்தால்...முருகனுக்கு ஏற்ற நாளான செவ்வாய்தோறும் மவுன விரதம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். குமார்.வி, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: பஞ்சதீபம் என்றால்....இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், நெய் ஆகிய ஐந்தையும் சமமாக கலந்து சிவன் கோயிலில் ஏற்றுவது. க.அட்சய தனுஷ்கா, மதுரை: வீடு கட்ட 'வானம் தோண்டுதல்' என்கிறார்களே... ஏன்?வானம் அல்ல; வாணம் தோண்டுதல் அதாவது வீடு கட்ட பயன்படும் அடிப்படைக் குழி.மனோகரன்.பி, சூலுார், கோயம்புத்துார்: பஞ்ச லோகம், கருங்கல் இதில் எது சுவாமி சிலைக்கு ஏற்றது?முதலிடம் கருங்கல், இரண்டாமிடம் பஞ்சலோகம். திவாகர்.டி, சங்கரன்கோவில், தென்காசி: பேராசை பிடித்தவர்களின் அடையாளம்...நாம் எதைக் கொடுத்தாலும் அவர்கள் முகத்தில் மலர்ச்சி இருக்காது. நரசிம்மராஜ்.கே, குஞ்சன்விளை, கன்னியாகுமரி: திதியை எங்கு கொடுக்க வேண்டும்? வருடத்திதியை வீட்டிலும், திதி கொடுக்க தவறியவர்கள் காசி, ராமேஸ்வரத்திலும் கொடுக்க வேண்டும். ரங்கசாமி.ஆர், பழநி, திண்டுக்கல்: பரிகாரம் செய்ய ஏற்ற நாள்...அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, அவரவரின் பிறந்த நட்சத்திரம். பூர்ணிமா.பி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்: அஷ்டமச்சனியால் பாதிக்கப்பட்டுள்ளேன். தீர்வு சொல்லுங்கள். திங்கள் தோறும் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள்.