பணம் சேர...
* நெல்லிக்கனி தானம் செய்த பெண்ணுக்காக ஆதிசங்கரர் 'கனகதாரா ஸ்தோத்திரம்' பாடினார். மகாலட்சுமி அருளால் அவளுக்கு பொன்னும் பொருளும் கிடைத்தது. இதை படித்தால் பணம் சேரும்.* மகாலட்சுமி தாமரை மலரில் வசிக்கிறாள். வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், பிறவி முடிந்த பின் மோட்சமும் அளிப்பாள்.* லட்சுமிக்கு விருப்பமான மலர் செவ்வந்தி என்னும் சாமந்திப்பூ.* நெல்லிமரத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாள். துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்தால் ஏகாதசி விரதமிருந்த பலன் கிடைக்கும்.* வில்வ மரத்தில் மகாலட்சுமி இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கள் அன்று வில்வ இலைகளைப் பறிக்கக் கூடாது.* மகாலட்சுமியை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம்.* வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமம். * மகாலட்சுமியின் கைகளில் இருந்து வில்வ மரம் தோன்றியது. * பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் கோயில்களில் காலையில் கோபூஜை செய்த பின்னரே சுவாமி தரிசனம் நடக்கும். * மகாலட்சுமியின் அம்சமான துளசிக்கு மாடம் வைத்து அதை தினமும் சுற்றி வர சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.