சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : டிச 15, 2023 | ADDED : டிச 15, 2023
* சனீஸ்வரர் நவகிரகங்களில் ஒருவர். இவருக்கு மந்தன், சனைச்சரன் என்றும் பெயர் உண்டு. * எள்ளும் நல்லெண்ணெய்யும் இவருக்கு உகந்தவை. * விநாயகர், அனுமனை வழிபட்டால் இவரது பாதிப்புகள் குறையும். * சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவரே சனீஸ்வரர். இவர் யமதர்மராஜனின் சகோதரன் ஆவார். * இவரே ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயம் செய்கிறார். * ஒருவரது ஜாதகத்தில் சனீஸ்வரர் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அவர் எல்லாவித சவுபாக்கியங்களையும் பெறுவார். * சனீஸ்வரர் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். * நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்பவர்களை சனீஸ்வரர் அனுக்ரஹத்தோடு காப்பாற்றுவார்.