உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜன.12 மார்கழி 27: சந்திர தரிசனம். திருவோண விரதம். கூடாரை வெல்லும் உற்ஸவம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனம். விவேகானந்தர் பிறந்த நாள். ஜன.13 மார்கழி 28: திருப்பரங்குன்றம் முருகன் பூத வாகனம். ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் தங்கப்பல்லக்கு. ஒப்பிலியப்பன் கோயில் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு. சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ஜன.14 மார்கழி 29: போகி. சதுர்த்தி விரதம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்போற்ஸவம் ஆரம்பம். திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம். தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. ஜன.15 தை 1: உத்திராயண புண்ணிய காலம். பொங்கல். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி. கல் யானைக்கு கரும்பு கொடுத்தல். திருநெல்வேலி நெல்லையப்பர் அயனத்தீர்த்தம். ஹரதத்தசிவாச்சாரியார் குருபூஜை. கரிநாள். ஜன.16 தை 2: மாட்டுப்பொங்கல். திருவள்ளுவர் தினம். மகாவியதீபாதம். சஷ்டி விரதம். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், ஸ்ரீவில்லிப்புத்துார் பெரிய பெருமாள் தங்கப்பல்லக்கு. திருவண்ணாமலை சிவபெருமான் திருவூடல் உற்ஸவம். பைம்பொழில், குன்றக்குடி, சென்னை இத்தலங்களில் முருகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம். கரிநாள். ஜன.17 தை 3: உழவர் திருநாள். திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. மதுரை கூடலழகர் கணு உற்ஸவம். கலிகம்பநாயனார் குருபூஜை. கரிநாள். ஜன.18 தை 4: கோவை பால தண்டாயுதபாணி, திருச்சேறை சாரநாதர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். காஞ்சிபுரம் உலகளந்தப்பெருமாள் பவனி. நமச்சிவாயமூர்த்தி நாயனார் குருபூஜை.